———————————
பறவை மனிதனும்
பள்ளிக்குழந்தைகளும்
———————————–
உலகப்புகழ் பெற்ற இந்திய பறவையியல் வல்லுனரும், இந்தியாவில் முதன் முறையாக பறவைகள் பற்றிய தரவுகளை முழுமையாகவும், அறிவியல் பூர்வமாகவும் தொகுத்த “சாலிம் அலி “யின் 119 – வது பிறந்தநாளை திருப்பூர் சுப்பையா நடுவம் பள்ளி யில் “திருப்பூர் இயற்கைக்கழகம் ” மிகுந்த அக்கறையுடன் நிகழ்த்தியது
இயற்கை பாதுகாப்பு உயிர் களோடு பின்னிப்பிணைந்தவை என்ற சூழியல் சார்ந்த கருத்தில் திடமான நம்பிக்கை கொண்டிருந்த சாலிம் அலி பறவைகள் பற்றியும், அதன் பழக்கவழக்கங்கள் குறித்தும் வெளியிட்ட கட்டுரைகளும், நூல்களும் எண்ணற்ற இயற்கைவியலாளர்களை உருவாக்கிய அறிவுப்புதையலாகும் ..!
கேரளத்தில் “அமைதிப் பள்ளத்தாக்கு “இராஜஸ்தானில் “பரத்பூர் “பறவைகள் சரணாலயம் சாலிம் அலியின் இயற்கை பாது காப்பு செயல் பாட்டால் தப்பிப் பிழைத்தவை ..!இந்தியாவின் இயற்கை வளங்களை காப்பாற்றி அடுத்த தலைமுறைக்கு தந்துள்ளார் அவைகளைக்காப்பாற்றி அடுத்த தலைமுறைக்குத்தர வேண்டும் ..!
“மனிதர்கள் இல்லா உலகில் பறவைகள் வாழ்ந்து விடும்! – ஆனால் பறவைகள் இல்லா உலகில் மனிதர்கள் வாழ முடியாது! “சாலிம் அலி 65 ஆண்டுகள் இந்தியாவின் சதுப்பு நிலம், பாலைவனம். புல்வெளி, புதர்காடு, மலைகள். ஏரி கள். குளங்கள், விளைநிலங்கள் என அலைந்து திரிந்து திரட்டிய அறிவை குழந்தைகளிடம் பகிர்ந்துகொண்டேன் ..!
உள்ளூரில் பார்க்கும் 50 பறவைகள் பற்றிய காணொளி நிகழ்வை வெகு கலகலப்பாய் நடத்தினார் இயற்கை கழக செயல் பாட்டாளர் இரவீந்தரன். வகுப்பறை யில் பறவைகளோடு பறவைகளாய் இரண்டு மணிநேரம் குழந்தைகள் வாழ்ந்ததை நேரில் பார்க்க நெஞ்சம் நிறைகிறது..!சாலிம் அலியின் பிறந்த நாளை பயனுள்ள வகையில் கொண்டாடிய “திருப்பூர் இயற்கை கழகத்தோழர்களைஎவ்வளவு பாராட்டினாலும் தகும்..!
– திரு. கோவை சதாசிவம்
Leave a Reply